இனி கூகுள் ப்ளேயில் புத்தகம் படிப்பது எளிது | Tamil Serial Today Org

இனி கூகுள் ப்ளேயில் புத்தகம் படிப்பது எளிது

Loading...

இனி கூகுள் ப்ளேயில் புத்தகம் படிப்பது எளிதுகூகுள் நிறுவனத்தின் ப்ளே என்ற சேவையைப்பற்றி அனைவரும் அறிந்ததே. தற்போதைய கூகுளின் அறிவிப்பின்படி ப்ளே சேவையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதாவது கூகுள் ப்ளேயிலுள்ள புத்தகங்கள் படிப்பதற்கான ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் மேன்மைபடுத்தப்பட உள்ளன.

இந்த புதிய மாற்றங்கள் புத்தகம் படிக்கும் முறையை எளித்தக்கி அழகாக்குகிறது. இந்த புது மாற்றங்கள் ப்ளே பயனாளர்களை அதிக பக்கங்களை படிக்கவைப்பதோடு நிறைய கற்றுக்கொள்ள வைக்கும் என்கிறது கூகுள்.

இந்த புதிய மாற்றங்களின் மூலமாக புத்தகங்களை தேடுவது மிக எளிது. ஆன்லைன் இல்லாமலும் பயன்படுத்தலாமென்பது மேலும் சிறப்புதருகிறது. இரவு நேரங்களில் படிப்பதற்கு தனி அமைப்பு ஒன்றும் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளதாம்.

கூகுள் ப்ளே புக்ஸ் என்பது ஆன்ட்ராய்டு பயன்படுத்தும் சாதனங்களுக்காகவே தனிப்பட்டமுறையில் வடிவமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புக்ஸ் ஸ்டோரில் சுமார் நான்கு இலட்சம் புத்தகங்களுக்கும் மேல் இருக்குமென்கிறது மற்றொரு ஆய்வு. பல புத்தக விற்பனையாளர்கள் இதில் அங்கம்வகிக்கின்றனர்.

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் இப்பொழுது கூகுள் ப்ளேயில் இலவசமாகக் கிடைக்கிறது. பயன்படுத்திப் பாருங்களேன்!

Loading...
Rates : 0
VTST BN