இனிமேல் பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம்

Loading...

இனிமேல் பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம்உண்மைதான். இனிமேல் பேஸ்புக் மெசஞ்சரில் SMS அனுப்பலாம். இதற்க்கான அறிவிப்பை பேஸ்புக் நிறுவனம் இன்று வெளியிட்டது. அதன்படி உங்களுடைய ஆன்ட்ராய்டு மெசஞ்சர் அப்ளிகேசனை அப்டேட் செய்தாலே போதும். அதிலும் இந்த சேவையை பேஸ்புக் கணக்கு மற்றும் மின்னஞ்சல் கூட இல்லாமலும் பெறலாம். இந்த புதிய பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேசனை முதலில் இந்தியா, இந்தோனேசியா, வெணிசுலா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னமெரிக்காவிலும் பின்னர் மற்ற டுகளிலும் அறிமுகப்படுதப்படவுள்ளது .

இந்த சேவையைப்பெற பயனாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டும் போதுமானது என்று பேஸ்புக் அறிவித்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் இந்தியாவிலுள்ள பல முன்னணி செல்போன் நிறுவனங்களுடன் இணைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேஸ்புக்கில் ஏற்க்கனவே 100 மில்லியான்களுக்கும்மேல் பயனாளர்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

முதல் பேஸ்புக் கணக்கை மொபைல் போன் வழியாக தொடங்குபவர்களுக்கு, ரூ.50 டாக்டைம் என்ற சலுகையை பேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைப்போன்று எல்லா இணைய நிறுவனங்களும் சேவைகளை தொடர்ந்தால் அது செல் போன் நிறுவனங்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்குமென கூறப்படுகிறது. எப்படியெனில் அதிகமான பயனாளர்கள் இணைவதுடன், இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமென செல் போன் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இது உபயோகமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். விரையமாகப்போவது நமது நேரமும், பணமும் மட்டுமே!

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply