இந்திய செல்போன் சந்தையை பிடிக்க‌ அதிரடி விலை குறைப்பு செய்யும் எல்ஜி நிறுவனம்

Loading...

இந்திய செல்போன் சந்தையை பிடிக்க‌ அதிரடி விலை குறைப்பு செய்யும் எல்ஜி நிறுவனம்எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி போனின் விலையை இந்தியாவில் மிக கணிசமான அளவில் குறைத்திருக்கிறது. இனி இந்த போனை ரூ.27,990க்கு வாங்கலாம். ஆனால் இந்த தகவலை எல்ஜி இன்னும் அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் பிலிப்கார்ட் மற்றும் பைதப்ரேஸ் போன்ற நிறுவனங்கள் இந்த போனை புதிய குறைந்த விலைக்கு விற்று வருகின்றன.
இந்த ஆப்டிமஸ் 4எக்ஸ் போன் கடந்த பிப்ரவரியில் களம் இறங்கியது. இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு வந்து ரூ.34,990க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த விற்பனைய மேலும் அதிகரிக்கும் வண்ணமாக இந்த போனின் விலையை ரூ.7,000 அளவு குறைத்து ரூ.27,990க்கு விற்பனை செய்ய தயாராகிவிட்டது எல்ஜி.

இந்த ஆப்டிமஸ் 4எக்ஸ் போன் 4.7 இன்ச் அளவில் எச்டி ரிசலூசனுடன் கூடிய ஐபிஎஸ் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. மேலும் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்கு இந்த போன் 1.5 ஜிஹெர்ட்ஸ் க்வாட் கோர் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸரையும் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த போன் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 8எம்பி பின்பக்கக் கேமராவையும் 1.3எம்பி முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது. அதோடு 16ஜிபி சேமிப்பு, அதை விரிவுபடுத்தக் கூடிய வசதி போன்றவற்றையும் இந்த போன் வழங்குகிறது.

இந்தியாவில் தீவாளி நெருங்கும் இந்த சமயத்தில் ஆப்டிமஸ் 4எக்ஸ் போனுக்கு விலைக் குறைப்பு செய்வதால் இதன் விற்பனை கணிசமான அளவு அதிகரிக்கும் என்று எல்ஜி கணக்கிடுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply