இந்தியாவில் ஆப்பிள் டிவியின் விலை ரூ.6,990 மட்டுமே

Loading...

இந்தியாவில் ஆப்பிள் டிவியின் விலை ரூ.6,990 மட்டுமேகடந்த வாரம்தான் இந்தியாவின் இணையச்சந்தையில் ஐடியூன்ஸ் காலெடுத்து வைத்தது. அதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஆப்பிள் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அண்மையில் வெளிவந்த ஒரு அறிக்கையின்படி ஆப்பிள் டிவியானது இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்படலாமெனவும் இதன் விலை ரூ.6,990 தான் எனவும் கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் இந்த வதந்திகள் பற்றி எந்த விளக்கமும் வெளியிடவில்லை. அதேபோல் தற்பொழுதுவரை எந்த ஆப்பிள் டிவி டீலரிடமும் ஒரு ஆப்பிள் டிவி கூட இருப்பிலில்லை என்பதே நிதர்சனம்.

ஐடியூன்ஸ் சந்தையில் பலரும் சாதனங்கள் வாங்கத்தயாராக இருக்கும் இந்த நிலையில் ஆப்பிள் டிவி வெளியிடப்பட்டால் நன்கு விற்பனையாகும் என்பது உறுதி!

ஆப்பிள் டிவியென்பது உண்மையில் தொலைக்காட்சிப்பெட்டி அல்ல. இதுவொரு சிறிய வடிவிலான சாதனம் இதன் மூலம் ஐடியூன்ஸ் சந்தையில் கிடக்கும் அனைத்து விதமான ஒலி மற்றும் ஒளி சார்ந்த அனைத்தையும் ரசிக்க முடியும்.

இந்த ஐடியூன்ஸ் சந்தையின் சேவைப்பெற வருடத்துக்கு ரூ.1,200 செலுத்தவேண்டும் என்பதை நினைவில் கொள்க!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply