இதய இரத்த குழாய்களை சுத்தம் செய்யும் பழங்கால ஜெர்மன் வைத்தியம் பற்றி அறிவீர்களா

Loading...

இதய இரத்த குழாய்களை சுத்தம் செய்யும் பழங்கால ஜெர்மன் வைத்தியம் பற்றி அறிவீர்களாதற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏராளமான கொடிய நோய்கள் மிகவும் வேகமாக தாக்குகின்றன. குறிப்பாக அதில் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளைத் தான் சிந்திக்கின்றனர். இதற்கு உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் தான் முக்கிய காரணம்.
இக்கொழுப்புக்கள் உடலில் ஆங்காங்கு தங்குவதோடு, இதய இரத்தக் குழாய்களின் சுவர்களில் படிந்து, நாளடைவில் அடைப்பை உண்டாக்கி, பல இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே ஒவ்வொருவரும் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதோடு, அவ்வப்போது இதய இரத்த குழாய்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
இதய இரத்த குழாய்களை சுத்தம் செய்ய ஓர் அற்புதமான பழங்கால ஜெர்மன் வைத்தியம் ஒன்று உள்ளது. அதைப் பின்பற்றினால் பல பிரச்சனைகளைத் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இப்போது ஜெர்மன் வைத்தியத்தால் கிடைக்கும் நன்மைகளையும், அந்த ஜெர்மன் வைத்தியம் என்னவென்றும் காண்போம்.


நன்மை #1

இந்த ஜெர்மன் வைத்தியத்தைப் பின்பற்றினால் உடல் சோர்வு, நோய்த்தொற்றுகளால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.


நன்மை #2

முக்கியமாக இந்த ஜெர்மன் வைத்தியம் உயர் கொலஸ்ட்ரால், பெருந்தமனி தடிப்பு போன்ற தற்போது பலரையும் அவஸ்தைப்பட வைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கும்.


நன்மை #3

ஜெர்மன் வைத்தியம் இரத்த நாளங்களில் ஏற்படும் நெருக்கடி மற்றும் சிறுநீரக கற்களில் இருந்து விடுபட பயனுள்ளதாக இருக்கும்.


நன்மை #4

இந்த ஜெர்மன் வைத்தியம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றுவதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்குதல்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.


தேவையான பொருட்கள்

பூண்டு – 4 பெரிய பற்கள்
துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 4
தண்ணீர் – 2 லிட்டர்
தேன் – சுவைக்கேற்ப

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply