ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வரும் லெனோவா பி770

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வரும் லெனோவா பி770சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனம் கணினி தயாரிப்பில் இந்த வருடம் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது இந்த நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனைக் களமிறக்க இருக்கிறது.

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வரும் இந்த ஸ்மார்ட்போனுக்கு லெனோவா பி770 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இந்த போன் வருவதால் கண்டிப்பாக இந்த போன் அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்பலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் 3,500 எம்எஎச் பேட்டரி ட்ராய்ட் ஆர்எஸட்ஆர் மேக்ஸ் எச்டி 3,300 எம்எஎச் பவர் செல்லைவிட பெரியது. மேலும் கேலக்ஸ் நோட் 2ல் இருக்கும் பேட்டரியைவிட இந்த போனில் இருக்கும் பேட்டரியின் சக்தி அதிகம். மேலும் இந்த பேட்டரி 21 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும் ஆற்றல் கொண்டது.

இந்த போன் 4.5 இன்ச் க்யுஎச்டி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. மேலும் 1.2 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் மீடியாடெக் எம்டி6577 ப்ராசஸர், 1ஜிபி ரேம் மற்றும் பின்பக்கம் சூப்பரான 8எம்பி கேமரா ஆகியவை இந்த போனை மிக அழகாக அலங்கரிக்கின்றன.

மேலும் இந்த போனில் 1.3எம்பி முகப்பு சூட்டர் கேமராவும் உள்ளது. இந்த போன் சீனாவின் பண மதிப்பில் 1,700 யுவனுக்கு சீனாவில் விற்கப்பட இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,000க்கு விற்கப்படும் என்று தெரிகிறது. விரைவில் இந்த போன் மற்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த போன் மிகவும் தரமாக இருக்கும் என்று நம்பலாம்.

Loading...
Rates : 0
VTST BN