ஆன்ட்ராய்டுடன் வரப்போகும் ஐபோன் நியோ

Loading...

ஆன்ட்ராய்டுடன் வரப்போகும் ஐபோன் நியோஆம்! முதல்முறையாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளிவரப்போகிறது “ஐபோன்”. அதாவது ஐஜிபி எலெக்ட்ரானிகா எஸ்எ, என்ற பிரேசிலைச் சேர்ந்த நிறுவனம் ஆன்ட்ராய்டு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆன்ட்ராய்டு போன்கள் “ஐபோன்” அதாவது IPHONE பெயருடன் வெளிவரும். இந்நிறுவனம் இந்த பெயரை பயன்படுத்துவதற்கான உரிமத்தை 12 வருடங்களுக்கு முன் அதாவது 2000த்திலேயே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உரிமத்தை ஆப்பிள் நிறுவனத்திற்கு முன் அதாவது “iPhone” என்ற ப்ராண்டுக்கு முன்னரே பதிவு செய்திருப்பது கூடுதல் தகவலாகும்.

ஐஜிபி எலெக்ட்ரானிகா, தயாரிக்கும் முதல் ஸ்மார்ட் போனின் பெயர் “ஐபோன் நியோ” என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

“iPhone” க்கு போட்டி “IPHONE”? பொறுத்திருந்து பார்ப்போம்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply