அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லதா

Loading...

அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லதாதண்ணீர் குடிப்பது குறித்து ஏகப்பட்ட குழப்பங்கள் பலருக்கும் இருக்கும் பலருக்கும், அவர்களுக்கான டிப்ஸ்.

பொதுவாக, நம் உடலுக்குத் தண்ணீர் தேவையெனில், தாகம் எடுத்து நம்மிடம் கேட்கும். அப்போது குடித்தால் போதுமானது. லிட்டர் லிட்டராக குடிக்கத் தேவையில்லை.

தாகமே எடுப்பதில்லை என்பவர்களுக்கு, கபம் அதிகமாகிறது என்று அர்த்தம். அதேபோல, அதிக தாகம் எடுப்பவர்களுக்கு பித்தம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

உடல் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், செரிமானப் பிரச்னை நிச்சயம் வரும். காரணம், வயிற்றில் செரிமானம் நடப்பது அக்னியால். அதிகமான தண்ணீர் அந்த அக்னியை அணைக்கும்போது, அது தடைப்படும்.

தாகம் எடுத்தும் தண்ணீர் அருந்தாமல் தவிர்க்கிறவர்களுக்கு, நீர்ச்சத்துக் குறைந்து, சரும வறட்சி, சுருக்கம், முடி உதிர்வு, கருவளையம், காலில் வெடிப்பு போன்றவை ஏற்படும்.

காலையில் எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் குடித்த பின்னரே காலைக் கடமைகளை முடிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு, அவர்களின் உடலில் கழிவை வெளியேற்றும் வாயு உற்பத்தி நின்றுவிட்டது என்று அர்த்தம்.

தானாக நடக்க வேண்டிய விஷயத்தை தண்ணீர் குடித்துதான் தூண்ட வேண்டும் என்றால், உடலில் பிரச்னை என்றே அர்த்தம்.

பொதுவாக, வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, ஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கும். குறிப்பாக, காலை எழுந்ததும் உணவைத் தவிர்த்து, ஒரு பழம் சாப்பிடலாம்.

தண்ணீரைக் குழந்தைகளுக்கு சில்வர் பாத்திரத்தில் வைத்தும், உடல் உழைப்பாளிகளுக்கு இரும்புப் பாத்திரத்தில் வைத்தும் கொடுக்கலாம்.

வெயில் காலத்தில் கண்டிப்பாக மண்பானைதான் பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், காப்பர் பாத்திரத்தில் வைத்த நீரை குடிக்க வேண்டாம்.

நிலத்தடி நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நிலையில் குடிப்பது சிறந்தது. தண்ணீரை லேசாக சூடுபண்ணுவதும், வெந்நீரில் பச்சைத் தண்ணீர் கலந்து வெதுவெதுப்பாகக் குடிப்பதும் தவறு. கிருமிகள் அழியாது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply