அடுத்த லுமியா ஸ்மார்ட்போனை வழங்குமா நோக்கியா

Loading...

அடுத்த லுமியா ஸ்மார்ட்போனை வழங்குமா நோக்கியாஸ்மார்ட்போன் சந்தையில் லுமியா வரிசை ஸ்மார்ட்போன்களுக்கு மவுசு கிடுகிடுவென்று ஏறிக் கொண்டே வருகின்றன. இதனால் நோக்கிய நிறுவனமும் ஸ்மார்ட்போன் படைப்பில் மும்முரம் காட்டி வருகிறது. அதிலும் லுமியா ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு அதிகம் சூடு பிடித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கிடையில் நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறன. லுமியா-510 ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஜிஎஸ்எம் அரினா வலைத்தளங்களில் கசிந்துள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ்-7.8 இயங்குதளம் கொண்டதாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த லுமியா-510 ஸ்மார்ட்போனின் சில தொழில் நுட்ப விவரங்களும் கசிந்துள்ளன.

இதில் 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் அகன்ற திரை வசதியினை வழங்கும்.

இதில் டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினையும் பெறலாம். கிட்டத்தட்ட இந்த லுமியா-510 ஸ்மார்ட்போன், லுமியா-610 ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப வசதிகளை கொண்டதாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் விலை $150 கொண்டாத இருக்கும். ஆனால் இது
பற்றி இன்னும் நோக்கியா நிறுவன்ததின் அதிகார பூர்வமான அறிவிப்பு ஏதும் வழங்கப்படவில்லை.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply