ஃப்ரீ மெசேஜ் சேவையினை வழங்கும் மைக்ரோமேக்ஸ்

Loading...

ஃப்ரீ மெசேஜ் சேவையினை வழங்கும் மைக்ரோமேக்ஸ்ஃப்ரீ மெசேஜ் சேவையினை வழங்கும் மைக்ரோமேக்ஸ்!இலவசமாக மெசேஜ் செய்து கொள்ளும் வசதியினை ஹுக்கப் மூலம் தனது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழங்குகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

ஹுக்கப் என்பது ஒரு எஸ்எம்எஸ் அப்ளிக்கேஷன். இந்த ஹுக்கப் அப்ளிக்கேஷனில் நிறைய வசதிகளை பெற முடியும். டூடில் பேட், வாக்கி-டாக்கி, லொக்கேஷன் ஷேரிங் போன்ற வசதிகளை இதில் பயன்படுத்த முடியும்.

இந்த எஸ்எம்எஸ் வசதியில் இன்னும் ஒரு பிரத்தியேக வசதி என்னவென்றால் அதிக மெமரியினை எடுத்து கொள்ளலாமல், குறைந்த மெமரி வசதியினை தான் எடுத்து கொள்ளும். அதோடு இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்துவதால் அதிக பேட்டரி தேவைப்படாது.

இந்த அப்ளிக்கேஷன் மூலம் புதிய மெசேஜ் வந்திருப்பதை நோட்டிஃபிக்கேஷன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஹுக்கப் அப்ளிக்கேஷன் மூலம் ஒரு வருடத்திற்கு, மாதம் 330 மெசேஜ்கள் ஃப்ரீயாக அனுப்பலாம் என்பது இதன் ஒரு முக்கிய அம்சம் என்று கூறலாம். இதனால் மியூசிக், புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றையும் எளிதாகவும், ஃப்ரீயாகவும் மெசேஜ் செய்ய முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply