Liquid Zest Plus ஏசெர் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி | Tamil Serial Today Org

Liquid Zest Plus ஏசெர் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

Liquid Zest Plus ஏசெர் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசிஸ்மார்ட் கைப்பேசி உலகில் அதிகளவில் அப்பிள் மற்றும் சம்சுங் நிறுவனத் தயாரிப்புக்களையே ஏனைய நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

முதலில் வடிவங்களில் மட்டுமே மேற்கண்ட நிறுவனங்களை பின்பற்றிய ஏனைய நிறுவனங்கள் தற்போது பெயர்களையும் பின்பற்ற தொடங்கியுள்ளன.

இவ்வாறே அப்பிள் நிறுவனம் மற்றும் சம்சுங் நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களில் Plus எனும் சொல்லையும் சேர்த்து வந்தன. இச் சொல்லை லேட்டஸ்ட்டாக ஏசர் (Acer) நிறுவனமும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

இதன்படி Liquid Zest Plus எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதில் நீடித்து மின் சக்தியை வழங்கக்கூடிய 5,000mAh மின்கலம் இணைக்கப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.

இது தவிர 5.5 அங்குல அளவினை உடைய தொடுதிரை, 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளன.

எனினும் Processor, RAM மற்றும் சேமிப்பு நினைவகம் என்பவை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் இதன் விலையானது 250 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN