Huawei அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

Huawei அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிமொபைல் சாதனங்களின் பாவனையானது சம காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக குறுகிய கால இடைவெளியில் தமது புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த வரிசையில் Huawei நிறுவனம் தற்போது இணைந்து கொண்டுள்ளது.

இந்நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Huawei P9 இனை அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை அந் நிறுவனம் விடுத்துள்ளது.

Huawei P9 கைப்பேசியானது 5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்களாக Octa Core Kirin 650 Processor, 2GB அல்லது 3GB RAM இனைக் கொண்ட பிரதான நினைவகம், 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா,, 3000 mAh மின்கலம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இதன் விலையானது 299 யூரோக்கள் ஆகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply