HTC அறிமுகம் செய்யும் மற்றுமொரு புதிய கைப்பேசி

Loading...

HTC அறிமுகம் செய்யும் மற்றுமொரு புதிய கைப்பேசிகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் மற்றும் சம்சுங் நிறுவனங்களுக்கு அதிக போட்டியாக பார்க்கப்படும் நிறுவனம் HTC ஆகும்.

கைப்பேசி சந்தையில் சிறந்த கேள்வியையும் கொண்டுள்ள இந்நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு புதிய கைப்பேசி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

HTC One S9 எனும் இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடையதுமான Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இத் திரையானது LCD தொழில்நுட்பத்தினைக் கொண்டிருப்பது விசேட அம்சமாகும்.

இது தவிர பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் ஊடாக அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 4 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

கூகுளின் Android Marshmallow இயங்குதளத்தினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 499 யூரோக்களாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply