8 மாதகால பயணத்திற்கு பின்னர் செவ்வாய் கிரகத்தில் நாளை தரையிறங்குகிறது ரோவர் விண்கலம்

Loading...

8 மாதகால பயணத்திற்கு பின்னர் செவ்வாய் கிரகத்தில் நாளை தரையிறங்குகிறது ரோவர் விண்கலம்செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை முழுமையாக ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி அமெரிக்காவின் கேப் கேனரவல் விண்வெளி ‌மையத்தில் இருந்து அட்லஸ் ராக்‌கெட் மூலம் ரோவர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது.

அமெரிக்கா அனுப்பிய இந்த ரோவர் விண்கலம் கிட்டத்தட்ட 8 மாதகால பயணத்திற்கு பின்னர் நாளை செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது. இதனால் நாசா விஞ்ஞானிகள் ரோவர் விண்கலத்தின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இப்போது வரைக்கும் ரோவர் தனது பாதையில் சரியாக போய்க்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி நாளை காலை 11 மணியளவில் ரோவர் தரையிறங்குகிறது.

ரோவரில் உள்ள க்யூரியாசிட்டி என்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட வாகனம் தான் செவ்வாயில் தரையிறங்கி, செவ்வாய் கிரகம் முழுவதையும் ஆய்வு செய்து அது குறித்த தகவல்களை அவ்வப்போது விஞ்ஞானிகளுக்கு அனுப்ப இருக்கிறது. சுமார் 2 மாதம் க்யூரியாசிட்டி வாகனம் செவ்வாய் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலம் இறங்கும் காட்சியை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நேரடியாக ஒளிப்பரப்பு செய்கிறது.

Loading...
Rates : 0
VTST BN