2 மற்றும் 5 வது இடங்களை பெற்ற ஐடி தொலைத் தொடர்பு நிறுவன பட்டியலில் இந்தியா

Loading...

2 மற்றும் 5 வது இடங்களை பெற்ற ஐடி தொலைத் தொடர்பு நிறுவன பட்டியலில் இந்தியாவருவாய், லாபம், பங்கு மதிப்பு, எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிய பிராந்தியத்தின் 11 முன்னணி ஐ.டி., தொலைத் தொடர்பு நிறுவனங்களை போர்ப்ஸ் நாளிதழ் பட்டியலிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் சீனாவின் பைடு (Baidu) தேடல் இணையத்தளம் உள்ளது. 2000ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தில் இப்போது 16,082 ஊழியர்கள் உள்ளனர்.

சீனாவில் கூகுள் இணையத்தளத்தை விட பல மடங்கு அதிக பயனீட்டாளர்களைக் கொண்டுள்ளது பைடு. அந்த நாட்டில் 79 சதவீதம் பேர் பயன்படுத்தும் சர்ச் என்ஜின் பைடுவைத் தான்.2வது இடத்தில் பார்தி ஏர்டெல்:

இதில் 2வது இடத்தில் இந்தியாவின் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனம் உள்ளது. 1995ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 20,892 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்த நிறுவனத்தின் கடந்த காலாண்டு வருவாய் ரூ. 19,350 கோடியாகும்.டிஜிகாம்:

மூன்றாவது இடத்தில் மலேசியாவின் டிஜிகாம் நிறுவனம் உள்ளது. 2,077 பேர் பணியாற்றும் இந்த நிறுவனம் மலேசியாவின் முன்னணி வயர்லெஸ் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமாகும்.டிஜிட்டல் சைனா ஹோல்டிங்ஸ்:

4வது இடத்தில் சீனாவின் டிஜிட்டல் சைனா ஹோல்டிங்ஸ் சாப்ட்வேர் நிறுவனம் உள்ளது. 2001ல் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 12,900 பேர் பணியாற்றுகின்றனர்.எச்சிஎல்:

5வது இடத்தை இந்தியாவின் எச்சிஎல் டெக்னாலஜிஸ் பிடித்துள்ளது. 1991ம் ஆண்டு உருவான இந்த நிறுவனத்தில் இப்போது 84,319 ஊழியர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு விற்பனை ரூ. 20,000 கோடியாகும்.

6வது இடத்தில் சீனாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான லெனோவா, 7வது இடத்தில் தென் கொரியாவின் என்எச்என் கார்ப்பரேசன் (அந் நாட்டின் மிகப் பிரபலமான நேவர் உள்ளிட்ட இணையத்தளங்களை நடத்தும் நிறுவனம்), 8வது இடத்தில் தைவானின் குவாண்டா கம்ப்யூட்டர் (இந்த நிறுவனம் ஆப்பிள், எச்பி ஆகிய நிறுவனங்களுக்காக ஐபாட், கம்ப்யூட்டர்களை தயாரித்துத் தரும் காண்ட்ராக் நிறுவனமாகும்),

9வது இடத்தில் தென் கொரியாவின் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 10வது இடத்தில் டிசிஎஸ் நிறுவனம் (இதில் 243,545 பேர் பணியாற்றுகின்றனர். இதன் கடந்த ஆண்டு வருவாய் ரூ. 50,000 கோடியாகும்), 11வது இடத்தில் சீனாவின் இணையத்தள நிறுவனமான டேசன்ட் ஹோல்டிங்ஸ் ஆகியவை உள்ளன.ஆகியவை உள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply