14ம் லூயினுடைய பொக்கிஷத்தை மீட்ட கடற்கன்னி ரோபோ

Loading...

14ம் லூயினுடைய பொக்கிஷத்தை மீட்ட கடற்கன்னி ரோபோமன்னன் 14ம் லூயினுடைய மூழ்கிய கப்பலில் இருந்து, குவளை ஒன்றை OceanOne என்ற மனித வடிவிலான நீர்மூழ்கி ரோபோ ஒன்று மீட்டு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Artificially intelligent humanoid robot என்ற செயற்கை அறிவால் செயல்படுகிற, கடற்கன்னி போன்ற ரோபோ மத்திய தரைக்கடல் பகுதியில் மனிதர்களால் செல்ல முடியாத ஆழத்தில் இருந்த மன்னன் 14ம் லூயினுடைய மூழ்கிய கப்பலில் இருந்த குவளையை மீட்டுள்ளது.

OceanOne என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ரோபோ ஸ்டான்போர்டு பல்கலை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள், செங்கடலில் மனிதர்கள் செல்ல முடியாத ஆழத்தில் உள்ள பவளப்பாறைகளை பற்றி ஆராய்ச்சி செய்ய அதனை வடிவமைத்துள்ளனர்.

அதில், மனிதனை போல் பார்க்கும் திறனும், செயற்கை மூளையும் பொருத்தப்பட்டுள்ளன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply