101 வயதில் பேஸ்புக்கில் கலக்கும் அமெரிக்க பெண்மணி

Loading...

101 வயதில் பேஸ்புக்கில் கலக்கும் அமெரிக்க பெண்மணிசமூக வலைத் தளங்களில் இப்போது முன்னனயில் இருப்பது பேஸ்புக் என்பது உலகம் அறிந்த உண்மை. ஒரு சிலர் இந்த பேஸ்புக்கை இளைஞர்களுக்கானது என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த பேஸ்புக்கில் நாளுக்கு நாள் புதிது புதிதாக இணைந்து கொண்டிருக்கின்றனர்.

உலக அளவில் இருக்கும் 95.5 கோடி பேஸ்புக் உறுப்பினர்களில் 55 வயதிற்கு மேற்பட்ட பெண்மணிகள் அதிக அளவில் பேஸ்புக்கில் இணைவதாக நம்பத் தகுந்த தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் பேஸ்புக்கில் 101 வயது நிரம்பிய வயது முதிர்ந்த அமெரிக்க பெண்மணி இந்த பேஸ்புக்கில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்.

இவர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மென்லோ பார்க் பகுதியைச் சேர்ந்தவர். இவருடைய பெயர் ப்ளாரன்ஸ் டெட்லர் என்பதாகும். தற்போது இவர்தான் பேஸ்புக்கைப் பயன்படுத்துவதில் வயது முதிர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

அதோடு கலிபோரினியாவில் உள்ள சிலிகான் வேலியில் உள்ள பேஸ்புக்கின் தலைமையகத்தைப் பார்த்த மிகவும் வயது முதிர்ந்தவர் என்று கருதப்படுகிறார். அதோடு இவர் பேஸ்புக்கின் தலைமையகத்தைப் பார்க்கச் சென்ற போது பேஸ்புக்கின் தலைமை இயக்குனர் மார்க் சுக்கர்பெர்க் மற்றும் மார்க்கெட்டிங் அலுவலர் செரில் சேன்பெர்க் போன்றோர் நேரடியாகச் சென்று இவரை வரவேற்றனர். மேலும் அவர்கள் ப்ளாரன்ஸோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

ப்ளாரன்ஸ் பேஸ்புக் தலைமயத்தைப் பார்க்க வந்ததால் அது தங்களுக்குப் பெருமை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதற்காக அவருக்கு நன்றியையும் தெரிவித்திருக்கின்றனர்.

வயது முதிர்ந்த இந்த ப்ளாரன்ஸ் 1932ல் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஆக்சிடன்டல் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர். இவர் ஆகஸ்ட் 2009ல் பேஸ்புக்கில் இணைந்தார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply