100 கிராம் எடையுடன் சந்தைக்கு வரும் சோலார் Power Bank

Loading...

100 கிராம் எடையுடன் சந்தைக்கு வரும் சோலார் Power Bankசூரிய சக்தியில் இயங்கும் Solar Power Bank-யை அய்வார்ஸ் வெம்பிரிஸ் என்பவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

திட நிலை இயற்பியல் துறையில் 14 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், காப்பர் இண்டியம் கால்லியம் செலனைடு சோலார் பேனலை தன்னுடைய தயாரிப்புக்கு பயன்படுத்தியுள்ளார்.

இதன் சிறப்பம்சம் இதன் எடை தான். இதன் எடை 100 கிராம் மட்டுமே உள்ளது ஆச்சரியம் அளிக்கும் விடயம் ஆகும். சந்தையில் ’Power Bank’கள் கிடைத்தாலும் இந்த அளவு குறைந்த எடைக்கு இல்லை.

இந்த சக்தி வங்கியை மடக்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய சாதனங்களான ஸ்மார்ட் போன், கமெரா, MP3 பிளேயர் ஆகியவற்றிக்கு இதை பயன்படுத்தலாம்.

GoSolar என பெயரிடப்பட்ட இந்த தயாரிப்புக்கு நிதியும் திரட்டப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் முதல் சந்தைக்கு வரவிருக்கும் இதன் விலை 140 டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply