ஹோம்ஷாப்18 வலைதளத்தில் ‘மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்

Loading...

ஹோம்ஷாப்18 வலைதளத்தில் ‘மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்ஏ-100 என்ற புதிய ஸ்மார்ட்போனை வழங்குகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். சமீபத்தில் தான் ஏ-84 ஸ்மார்ட்போனை வெளியிட்டது.

அதோடு ஏ-44 சூப்பர்ஃபோன் ஃபன்க் என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் மைக்ரோமேக்ஸ் ஏ-100 ஸ்மார்ட்போன் 5 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் அகன்ற திரை மூலம் 854 X 480 திரை துல்லியத்தினை பெறலாம். இதில் இன்னும் முக்கியமாக சொல்ல வேண்டியது 2,000 எம்ஏஎச் பேட்டரி வசதி பற்றி தான். இந்த பேட்டரி நீடித்த ஆற்றலை வழங்கும். இதன் மூலம் உயர்ந்த தொழில் நுட்ப வசதியினை எந்த வித தடையும் இன்றி பெறலாம்.

இதற்கு இந்த பேட்டரி சிறந்த வகையில் நீடித்து உழைக்கும். இரண்டு நெட்வொர்க் வசதிக்காக சப்போர்ட் செய்ய இதில் டியூவல் சிம் வசதியையும் கொண்டது. 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை.

4 ஜிபி இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியையும் கொடு்க்கும். மைக்ரோமேக்ஸின் இந்த ஏ-100 ஸ்மார்ட்போனை ஹோம்ஷாப்18 வலைத்தளத்தில் ரூ. 9,999 விலையில் பெற முடியும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 11,999 விலை மதிப்பு கொண்டது என்றும் தகவல்கள் கூறுகின்றனர்.

Loading...
Rates : 0
VTST BN