ஸ்மார்ட் கைப்பேசி ரோபோவை அறிமுகம் செய்தது ஷார்ப்

Loading...

ஸ்மார்ட் கைப்பேசி ரோபோவை அறிமுகம் செய்தது ஷார்ப்இலத்திரனியல் சாதனங்களின் வடிவமைப்பில் பெயர் பெற்ற நிறுவனங்களுள் ஒன்றான ஷார்ப் (Sharp)

புதிய வகை ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

முற்றிலும் ரோபோவினைப் போன்ற தோற்றம் கொண்ட இக் கைப்பேசியானது நடக்கக்கூடியதாகவும், குறுஞ்செய்திகளை வாசிக்கக்கூடியதாகவும், அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயல்படும் Sharp Robohon எனும் இந்த ரோபோகைப்பேசியானது 2 அங்குல அளவுடைய திரையினையும்கொண்டுள்ளது.

இது தவிர வீடியோ, புகைப்படங்களை பெரிதாக்கி காண்பிக்கக்கூடிய புரொஜெக்டரினையும் கொண்டுள்ள இச் சாதனத்தின் விலையானது1,800 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மேலும் இதிலுள்ள VoiceRecognition வசதியினை பெற்றுக்கொள்வதற்கு மாதாந்தம் 6 டொலர்கள் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply