ஸ்பைஸி வெஜ் லொலிபொப்

Loading...

ஸ்பைஸி வெஜ் லொலிபொப்
தேவையான பொருட்கள்

வெள்ளை ரவை 2 கப்

தக்காளி – 3

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்

பச்சைப்பட்டாணி – 4 டேபிள்ஸ்பூன்

கெரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்

டூத்பிக் குச்சி – தேவையான அளவு.


தாளிக்க…

கடுகு – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – 1 கொத்து


செய்முறை

தக்காளியை நறுக்கி மிக்ஸியில் நீர் விடாமல் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து 3 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து, கொதித்ததும் அரைத்த தக்காளி விழுது, கெரட் துருவல், ரவையை சேர்க்கவும். பாதி வெந்ததும் பச்சைப்பட்டாணி சேர்த்து இறக்கி இட்லித் தட்டில் ஆவியில் கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும். இது விரைவில் வெந்துவிடும். வெந்ததும் இறக்கி மல்லித்தழை தூவி டூத்பிக்கில் செருகி வைக்கவும். ஸ்பைஸி வெஜ் லொலிபொப் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply