ஸ்பைசி செட்டிநாடு நண்டு மசாலா

Loading...

ஸ்பைசி செட்டிநாடு நண்டு மசாலா
தேவையான பொருட்கள்

நண்டு – 6

சீரகம் – அரைத் தேக்கரண்டி

சோம்பு – ஒரு தேக்கரண்டி

பூண்டு – 8 பல்

இஞ்சி – ஒரு துண்டு

வெங்காயம் – 2

நாட்டுத் தக்காளி – 3

மிளகு – ஒரு தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 4

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி


செய்முறை

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய் வற்றல் முதலியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கலக்க வேண்டும்.

பிறகு அதில் நண்டை போட்டு நன்றாக கொதி வந்தவுடன் உப்பு போட்டு மூடி தீயை குறைத்து வைத்து சுருள சுருள கிண்டி கொத்தமல்லித் தழை தூவி இறக்கி வைக்க வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply