ஸ்டஃப்டு கோவைக்காய்

Loading...

ஸ்டஃப்டு கோவைக்காய்

தேவையானவை:
கோவைக்காய் – 100 கிராம், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பெருங்காயம், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கோவைக்காயை கழுவி துடைத்து நான்காக ( ) போல பிளந்து வைக்கவும் (முழுவதும் வெட்டிவிட வேண்டாம்). பின்பு, ஆவியில் சில நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை, வெறும் கடா யில் வறுத்துப் பொடிக்கவும். வெந்த கோவைக்காயின் நடுவே இந்த பொடியை அடைக்கவும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு தாளித்து, ஸ்டஃப் செய்யப்பட கோவைக்காயை சேர்த்து தண்ணீர் தெளித்து வேக விட்டு, உப்பு தூவிக் கிளறி, சுருள வதக்கி இறக்கவும்.


குறிப்பு:
கிரீன் சட்னியை ஸ்டஃப் செய்தும் இதை செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply