வேலை தேடுவதனை இலகுவாக்க புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்யும் LinkedIn

Loading...

வேலை தேடுவதனை இலகுவாக்க புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்யும் LinkedInஇன்றைய காலகட்டத்தில் காணப்படும் பிரபல்யமான சமூகவலைத்தளங்களுள் LinkedIn தளமும் ஒன்றாகும்.

வீட்டில் இருந்தவாறே தமக்கு பொருத்தமான வேலை ஒன்றினை தேடுவதற்கு வழிவகை செய்வதால் ஏனைய சமூகவலைத்தளங்களில் இருந்து LinkedIn சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றது.

இத் தளமானது படிப்பை முடித்துவிட்டு உடனடியாக வேலை ஒன்றினை தேடும் மாணவர்களுக்காக LinkedInStudents App ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

LinkedIn தளம் மேற்கொண்ட ஆய்வின்படி 86 சதவீதமான மாணவர்கள் சிறந்த வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காக கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.

ஆனால் அவர்களில் 44 சதவீதமான பட்டதாரிகள் தொடர்ந்தும் வேலை தேடுபவர்களாகவே இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

எனவே அவர்களும் இலகுவாகவும், விரைவாகவும் வேலை ஒன்றினை தேடிக்கொள்ளும் பொருட்டு இப் புதிய அப்பிளிக்கேஷனினை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது அமெரிக்க மாணவர்களுக்காக மட்டும் இந்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android இயங்குதளங்களில் செயற்படக்கூடிய மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்தலாம்.

எனினும் ஏனைய நாடுகளில் இவ் வசதியினை விரைவில் பெற்றுக்கொள்ளவதற்கான எந்தவொரு அறிவிப்பினையும் LinkedIn இதுவரை வெளியிடவில்லை.

ஆனால் விரைவில் ஏனைய நாடுகளிலும் இவ் வசதி கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply