வெள்ளை நிற கார்களுக்கே மதிப்பு அதிகம்

Loading...

வெள்ளை நிற கார்களுக்கே மதிப்பு அதிகம்பிற வண்ணங்களை காட்டிலும் வெள்ளை நிறம் கொண்ட கார்கள்தான் தனது மதிப்பை நீண்ட காலம் இழப்பதில்லை என ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கி்ன்றனர்.

லட்சக்கணக்கில் பணம் போட்டு கார் வாங்கும்போது அந்த கார் நீண்ட நாட்கள் மெருகு குலையாமல் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் விரும்பும் ஒன்றுதான். ஏனெனில், அந்தஸ்தின் அடையாளமாக கார்கள் பார்க்கப்படுவது முக்கிய காரணம்.

தவிர, சில ஆண்டுகள் கழித்து காரை விற்பனை செய்ய வேண்டியிருக்கும்போது காரின் மெருகு குலையாமல் இருப்பது முக்கியம். அதிலும், மெருகுடன் இருப்பதற்கு நிறம் அடிப்படையாக பார்க்கப்படுகிறது. காரின் தோற்றத்துக்கு ஏற்றவாறு கூடுதல் விலையும் கிடைக்கும்.

எனவே, கார் வாங்கும்போது நிறத்தை தேர்வு செய்வதில் முடிவு எடுக்கும்போது சில தடுமாற்றங்கள் வருகிறது. இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த சிஏபி கார் மதிப்பீட்டு நிறுவனம் கூறியிருப்பதாவது:

“பிற நிறங்களில் இருக்கும் கார்களை காட்டிலும் வெள்ளை நிற கார்கள்தான் அதிகம் விரும்பப்படுகிறது. மதிப்பை தக்க வைத்துக்கொள்வதில் வெள்ளை நிற கார்கள் முன்னிலை வகிக்கின்றன. வேறு நிறங்கள் கொண்ட கார்களை விட மார்க்கெட்டில் இந்த கார்களுக்கு 5 சதவீத கூடுதல் மதிப்பு இருக்கிறது.

தங்க நிறம், நீலம், ஆரஞ்ச் உள்ளிட்ட நிறம் கொண்ட கார்கள் மார்க்கெட்டில் சராசரி மதிப்புக்கும் கீழேதான் இருக்கின்றன. மேலும், பச்சை நிறம் கொண்ட கார்கள் பெரும்பாலும் விலையுயர்ந்ததாக இருப்பதால், யூஸ்டு மார்க்கெட்டுக்கு வருவதில்லை.

மொத்தத்தில் பார்க்கும்போது வெள்ளைக்கு அடுத்து கருப்பு, சில்வர் மற்றும் சாம்பல் நிற கார்கள் அதிகம் மதிப்பு கொண்டவையாக இருக்கின்றன,” என்று தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் மட்டுமல்ல, இந்தியாவிலும் வெள்ளை நிற கார்கள் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கி்ன்றன. எனவே, கார் வாங்கும்போது இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply