வெள்ளரி பிசிறல்

Loading...

வெள்ளரி பிசிறல்
தேவையானவை:
வெள்ளரிக்காய் – ஒன்று, பயத்தம்பருப்பு – அரை கரண்டி, காய்ந்த மிளகாய் – 4, கடுகு, பெருங்காயம், எண்ணெய், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, மல்லித்தழை – சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெள்ளரியை கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பயத்தம்பருப்பை மலர வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து… காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், வெள்ளரி சேர்த்து வதக்கவும். பின்பு உப்பு, வெந்த பயத்தம்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply