வெற்றிகரமாக கலிபோர்னியாவை சென்றடைந்த சோலார் இம்பல்ஸ் 2 விமானம்

Loading...

வெற்றிகரமாக கலிபோர்னியாவை சென்றடைந்த சோலார் இம்பல்ஸ் 2 விமானம்சூரிய ஒளி சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் வகையில், ‘எஸ்.ஐ – 2’ எனப்படும், ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் 13 கட்டங்களாக, 35 ஆயிரம் கி.மீ துாரம் சுற்றிவரும் சாதனை முயற்சி, வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்டில் கடந்தாண்டு துவக்கப்பட்டது.

இந்த விமானத்தில், 17 ஆயிரம் சோலார் செல்கள் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட இறக்கை மூலம் சூரியஒளி சக்தி கிரகிக்கப்படுகிறது.

கடந்தாண்டு யூலையில், இந்த விமானத்தின் பேட்டரிகளில் ஏற்பட்ட கோளாறால் பயணம் தடைபட்டது. பல மாதங்களுக்கு பின்,கோளாறு சரி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜப்பானிலிருந்து, 4,000 கி.மீ., துாரபயணத்துக்கு பின், அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்துக்கு, இந்த விமானம் சென்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது, ஒன்பதாவது கட்ட பயணமாக பசிபிக் பெருங்கடலை கடந்து, வெற்றிகரமாக கலிபோர்னியா மாகாணத்தை இவ்விமானம் சென்றடைந்தது.

சுவிட்சர்லாந்து நாட்டு விமானி பெர்ட்ரண்ட் பிக்கார்ட் விமானத்தை இயக்கினார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply