வெந்தய மோர்க்குழம்பு

Loading...

வெந்தய மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்

தயிர் – 2 கப்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 3 டீஸ்பூன்


தாளிக்க…

தே.எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
மணத்தக்காளி வத்தல் – 3 டீஸ்பூன்


வறுத்து, விழுதாக அரைக்க…

வெந்தயம் – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – 10
தே.எண்ணெய் – 1/2 டீஸ்பூன்


செய்முறை :

வறுக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து ஆறிய பின் விழுதாக அரைக்கவும்.

தயிரில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஓரிரு சுற்றும் சுற்றிக் கொள்ளலாம்.

தயிருடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும்.

தேங்காய் எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாகும் வரை வறுத்து, குழம்பில் சேர்க்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply