வெஜிடபிள் பொங்கல்

Loading...

வெஜிடபிள் பொங்கல்

தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – அரை கப், தக்காளி, கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 5, பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறிய துண்டு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பட்டை – சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று, முந்திரி – 10, நெய் – தேவையான அளவு, எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை:
அரிசி, பருப்பை சுத்தம் செய்து, மூன்றரை டம்ளர் நீர் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். காய்கறிகள் அனைத்தை யும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய், எண்ணெயை சூடாக்கி, மிளகு, சீரகம், பட்டை, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்த காய்கறி கல வையை, குழைய வேகவைத்த அரிசி – பருப்புடன் சேர்த்துக் கிளறி, நெய் ஊற்றிக் கலந்தால்… வெஜிடபிள் பொங்கல் தயார். இதை சூடாகப் பரிமாறவும். தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply