வெங்காய சட்னி

Loading...

வெங்காய சட்னி
தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 3

உருளைக்கிழங்கு – 1

தக்காளி – 1

எண்ணெய் – 3 மேசைக் கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து


அரைக்க:

மிளகாய் – 8

தேங்காய் – 4 சில்

சோம்பு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்


தாளிக்க

கடுகு, உளுந்து – 1 டீஸ்பூன்


செய்முறை:

வெங்காயத்தை மிகப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை பொடி ஸ்லைஸாக நறுக்கவும்.

தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கியவற்றை நன்கு வதக்கவும்.

அரைக்க வேண்டியவற்றை மையாக அரைத்து எடுக்கவும். நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா, உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிட்டு கூட்டுப்போல் வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையானது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply