வீட் பால்ஸ் | Tamil Serial Today Org

வீட் பால்ஸ்

Loading...

வீட் பால்ஸ்
தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப், பச்சரிசி மாவு – 4 டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4, கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, மல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து, ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து… உப்பு, கோதுமை மாவு சேர்த்துக் கிளறி இறக்கி, பச்சரிசி மாவை மேலே தூவி பிசிறி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிறகு ஆவியில் வேகவிடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் கோதுமை மாவு உருண்டைகளை சேர்த்துக் கிளறி இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN