விஷம் கக்கும் நவீன வாழ்க்கையால் அச்சுறுத்தும் நீரிழிவு நோய்

Loading...

விஷம் கக்கும் நவீன வாழ்க்கையால் அச்சுறுத்தும் நீரிழிவு நோய்கொடிய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சர்வதேச அமைப்பால் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.
விபத்து மரணங்கள் நம் எச்சரிக்கையை மீறி நடந்துவிடுவது. முதுமைதான் இயற்கை மரணம்.

நடுத்தர வயதிலோ முதுமையிலோ கொடிய நோய்கள் பிடித்து இறந்தால் அது விழிப்புணர்வு, மற்றும் அக்கறையின்மையே.

எய்ட்ஸ், புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு (சர்க்கரை நோய்), போன்ற பெரிய நோய்கள் நமக்கு சவாலாக இருக்கின்றன. இந்த நோய்களுக்கான காரணங்கள் நகரங்களில் உள்ள வாழ்க்கை முறையிலேயே மண்டி கிடக்கின்றன.


நீரிழிவு நோய்

மற்ற கொடிய நோய்களை விடவும் நீரிழிவு நோய்தான் எல்லோருக்குமே வரும் வாய்ப்புடையதாக உள்ளது.

அப்படி வந்துவிட்டால், நோயாளியின் கவன குறைவால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எகிறிவிட்டால், உடலின் மொத்த உறுப்புகளையுமே பாதிக்கும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் நோயாகவும் உள்ளது.


பெருகிவரும் நீரிழிவுக்காரர்கள்

உலகில் 350 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள் எண்ணிக்கை 20 வருடங்களில் இரண்டு மடங்காகிறது.

2012 ல் நீரிழிவு நோயின் நேரடி பாதிப்பால் மட்டும் 15 லட்சம் பேர் இறந்துள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய்கள் தடுப்புக்கு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு செய்துவந்தாலும் நோயாளிகள் விகிதாச்சாரம் குறையவில்லை.

அதனால், விழிப்புணர்வையும் விஞ்சி, விடமுடியாத தீயப்பழக்கங்கள், வறுமை போன்ற வேறு காரணங்களும் தடையாக இருப்பது தெரிகிறது.

அதனால், சர்வதேச அமைப்பு சுகாதார சீர்திருத்தத்திற்கு வருவாய் குறைந்த நாடுகளையே முதல் இலக்காக எடுத்துக்கொண்டுள்ளது.


பாங்கிரியாட்ஸ் செயலிழப்பு

உடலின் ஜீரண உறுப்புகளில் பாங்கிரியாட்ஸ்(pancreads) என்ற சுரப்பி இன்சுலின் சுரப்பதிலிருந்து ஓய்வடைந்தால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கிறது. உணவில் உள்ள சர்க்கரையை செறிக்க உதவுவதே இன்சுலின்தான்.


விஷம் கக்கும் நவீன வாழ்க்கைமுறை

நாம் பணியிலிருந்து ஓய்வுபெறும் முன்பே நமக்கு பணிசெய்யும் உறுப்புகள் ஓய்வுபெறுவதற்கு காரணம், விஷத்தன்மையான உணவுகளைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்.

செயற்கை முறையில் தயாரிக்கப்படும் எந்த பொருளும் எதிர்விளைவுகள் தராமல் இருக்கப்போவதில்லை. அதே சமயம் மனிதனின் இஷ்டம் போல இயற்கை பொருள்களை உருவாக்கிக்கொள்ளவும் முடிவதில்லை.

அரசு உரிமங்களோடு விற்பனையில் இருக்கும் உணவுக்குரிய பொருள்களில் அதிக லாப நோக்கில் கலப்படம் நடக்கிறது. காய்கறிகளில் மரபணு மாற்றம், விளைவிப்பதிலும் விஷத்தன்மையான ரசாயன உரங்கள் சேர்ப்பு.

மைதா, சர்க்கரை போன்ற பொருள்களின் உற்பத்தியில் அதன் வெண்மை நிறத்துக்காக 30 க்கும் மேலான தீங்கான பொருள்கள் சேர்ப்பு.

டீ, காபி, பால் பொருள்களின் தேவை அதிகரித்துள்ள அளவுக்கு மாடுகளோ, பால் உற்பத்தியோ இல்லைதான் இருந்தும் மக்களின் தேவைக்கு மிஞ்சிய பால் எப்படி கிடைக்கிறது.

பாலைப்போல வெள்ளையான நிறத்தில் எந்த பவுடரை கலந்து கொடுத்தாலும் அருந்தும் மனநிலைக்கு மக்களும் வந்துவிட்டனர்.

இப்படி தொடரும் தீங்குகள், அரசுகளால் தடுக்க முடியாததாகவும் மக்களால் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகவும் மாறியுள்ளது.


ஆரோக்கியத்தில் நமக்கு நாமே

நீரிழிவு போன்ற நோய்கள் வந்தவர்களில் அதற்கு முறையான சிகிச்சை மற்றும் கட்டுப்பாடுகளால் நோயின் தீவிரம் தாக்காமல் விழிப்புணர்வால் வாழ்வை நீட்டித்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

மாறாக, நோய் உண்டான குறுகிய காலத்திலே இறப்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு பிரிவினருமே விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடுகளால் நோய் வருமுன் காத்துக்கொள்வது நிச்சயம் சாத்தியமே.

மனிதனுக்கு மரணம் எந்த வயதிலும் வரலாம் எந்த வழியிலும் வரலாம் என்பது இயற்கை தத்துவம்.

நவீன வாழ்க்கை முறையால் நோயை பெற்று, அந்த நோய் வரவால் வாழ்க்கையையே கைவிட்டுச் சாகிறார்கள்.

தாமதமாய் வர இருந்த மரணத்தை தவறான நடவடிக்கைகளால் விரைவாக தழுவிக்கொள்பவர்கள் கணக்கை எந்த விதியின் கீழ் சேர்ப்பது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply