விற்பனையில் தொடர்ந்தும் சாதனை படைக்கும் BlackBerry Priv

Loading...

விற்பனையில் தொடர்ந்தும் சாதனை படைக்கும் BlackBerry Privபிளாக்பெரி நிறுவனத்தின் கைப்பேசிகளுக்கு எப்பவுமே தனி மவுசு காணப்படுவது அனைவரும் அறிந்ததே.
அதில் உள்ள பாதுகாப்பு வசதியே இதற்கு முதன்மை காரணமாக விளங்குகின்றது.

இந் நிறுவனம் BlackBerry Priv எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து தற்போது ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

எனினும் நான்காவது காலாண்டுப் பகுதியில் மட்டும் சுமார் 600,000 ஸ்மார்ட் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிளாக்பெரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கு முந்தைய காலாண்டில் 700,000 ஸ்மார்ட் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அந் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட கைப்பேசியாக அறிமுகம் செய்யப்பட்டதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

இதனால் இனி வரும் காலங்களில் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட கைப்பேசியினை அதிகளவில் பிளாக்பெரி நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply