விற்பனையில் சரிவை எதிர்நோக்கும் Xiaomi கைப்பேசிகள்

Loading...

விற்பனையில் சரிவை எதிர்நோக்கும் Xiaomi கைப்பேசிகள்Xiaomi என்பது மொபைல் சாதனங்களுக்கு உலகளாவிய ரீதியில் பெயர் பெற்ற நிறுவனமாகும்.

இந் நிறுவனம் தனது களஞ்சியப்படுத்தும் நடவடிக்கையினை சீனாவில் மட்டுமன்றி இந்தியாவிலும் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறிருக்கையில் இவ் வருடத்தின் முதல் காலாண்டுக்கான தனது கைப்பேசி விற்பனை தொடர்பான புள்ளி விபரத்தினை அந் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி இதுவரை 14.8 மில்லியன்ஸ்மார்ட் கைப்பேசிகளே விற்பனையாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை அடிப்டையாகக் கொண்டு பார்க்கையில்2016ம் ஆண்டு ஏறத்தாழ 60 மில்லியன் கைப்பேசிகள் விற்பனையாக வாய்ப்பு உண்டு.

ஆனால் கடந்த வருடம் முழுவதுமாக70 மில்லியன் ஸ்மார்ட் கைப்பேசிகளினை அந் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

எனவே கடந்த ஆண்டினைக் காட்டிலும்இந்த ஆண்டு விற்பனையில் வீழ்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எது எப்படியோ இவ் வருடத்தின் முதல்காலாண்டுக்கான விற்பனையை வைத்து பார்க்கும்போது Xiaomi நிறுவனத்தின் கைப்பேசிகளுக்குதொடர்ந்தும் சிறந்த கேள்வி நிலவுவது வெட்டவெளிச்சமாக இருக்கின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply