விரைவில் புதிய டேப்லட்டை வழங்கும் எச்டிசி நிறுவனம்

Loading...

விரைவில் புதிய டேப்லட்டை வழங்கும் எச்டிசி நிறுவனம்சிறந்த யுக்திகளை கையாண்டு வரும் எச்டிசி நிறுவனம் புதிய டேப்லட்டினை விரைவில் வழங்குகிறது. இந்த புதிய டேப்லட்டின் புகைப்படங்கள் காற்றுவாக்கில் சில வலைத்தளங்களில் கசிந்துள்ளது.

இவிலீக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புதிய எச்டிசி டேப்லட் பற்றிய விஷயங்களை ட்வீட் செய்துள்ளது. இதில் இந்த புதிய டேப்லட்டின் வடிவமைப்பினை பார்க்கும் போது, இந்த டேப்லட் வித்தியாசமான வடிவமைப்பினை கொண்டதாக இருக்கும் என்று கூறலாம்.

காற்றுவாக்கில் கசிந்திருக்கும் இந்த புகைப்படங்களை வைத்து, இந்த டேப்லட் மெல்லிய கவர்ச்சிகரமான தோற்றத்தினை கொண்டதாக வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லட் அசத்தலான தொழில் நுட்ப வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.

2012ம் ஆண்டின் பெர்லினில் நடக்க இருக்கும் ஐஎஃப்ஏ கண்காட்சியில் இந்த டேப்லட் அறிமுகமாகுமா? இல்லையா? என்பது பற்றி சில கருத்துகளும் உலா வந்து கொண்டிருக்கின்றன. எச்டிசி நிறுவனத்தின் இந்த புதிய டேப்லட் பற்றி வேறெந்த தகவல்களும் இன்னும் சரிவர வெளியாகவில்லை என்று தான் கூற வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply