விரிவுபடுத்தப்படுகின்றது Apple Pay சேவை

Loading...

விரிவுபடுத்தப்படுகின்றது Apple Pay சேவைஅப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புக்களை ஒன்லைன் ஊடாக தனது வாடிக்கையாளர்கள் இலகுவாகவும், விரைவாகவும் பெற்றுக்கொள்வதற்காக அறிமுகம் செய்த சேவையே Apple Pay ஆகும்.

இச் சேவையானது முதன் முறையாக அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

மொபைல் சாதனங்களின் ஊடாக பணத்தைச் செலுத்தும் இச் சேவையானது அங்கு வெற்றியளித்துள்ளது.

இதனால் குறித்த சேவையை ஏனைய நாடுகளிற்கும் விரிவுபடுத்த அப்பிள் நிறுவனம் எண்ணியுள்ளது.

இதன் ஒரு அங்கமாக தற்போது சிங்கப்பூரிலும் Apple Pay சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சேவையினை American Express நிறுவத்துடன் இணைந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை iPhone 6, 6 Plus, iPhone 6S, 6S Plus, iPhoneSE மற்றும் Apple Watch உட்பட iPad Air 2, iPad Pro,iPad Mini 3 ஆகிய சாதனங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை இவ் வருட இறுதிக்குள் ஐக்கிய இராச்சியம், சீனா, கனடா, அவுஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளிலும் Apple Pay சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply