வியர்க்குரு தொல்லை நீங்க

Loading...

வியர்க்குரு தொல்லை நீங்ககோடைகாலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடிய பிரச்சனைகளில் வியர்குருவும் ஒன்று.
அதிகப்படியான வெயிலால் போதிய காற்றோட்டம் கிடைக்காமல்,வியர்வை அதிகம் வெளியேறுவதால் வியர்க்குருவரும்.
இதனைத் தவிர்ப்பதற்காக பலரும் காட்டன் உடைகளை உடுத்துவார்கள் மற்றும் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பார்கள்.
ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடையில் வரும் வியர்குருவைத் தடுக்கலாம்.
வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை,வியர்குருவால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும்.
எனவே வியர்குரு அதிகம் இருந்தால், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் கழுவுங்கள்.
அல்லது வேப்பிலை போட்ட தண்ணீரை கொதிக்கவைத்து ஆறிய பின் அந்த நீரால் முகம் மற்றும் உடலைகழுவி வந்தால் வியர்குருவால் ஏற்படும்அரிப்பை கட்டுப்படுத்தும்.
சந்தனம் குளிர்ச்சித்தன்மை கொண்டது. சந்தனப்பொடியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து,சருமத்தில் தடவி ஊற வைத்துகழுவுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைஉண்டாக்கும் வியர்குருவை போக்கலாம்.
கோடையில் சருமத்திற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக,பாசிப்பருப்பு மாவைக் கொண்டு தேய்த்து குளித்து வர வியர்குரு பிரச்சனையில்இருந்து விடுபடலாம்.
அதற்கு பாசிப்பருப்பு மாவு, உளுத்தம் பருப்புமாவு, கடலைப்பருப்பு மாவு ஆகியவற்றை ஒன்றாக சரிவிகிதத்தில் கலந்து, தினமும் அவற்றைக்கொண்டு தேய்த்து குளிக்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply