விபத்துகளை தவிர்த்து எச்சரிக்கை செய்யும் புதிய தொழில்நுட்பக் கருவி சோதனை ஓட்டத்தில்

Loading...

விபத்துகளை தவிர்த்து எச்சரிக்கை செய்யும் புதிய தொழில்நுட்பக் கருவி…சோதனை ஓட்டத்தில்“பேசும் வாகனங்கள்” என்ற கருவை அடிப்படையாக கொண்டு புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க போக்குவரத்து துறை மற்றும் மிக்ஸிகன் பல்கலைகழக விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

25 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இதற்கான புதிய தொழில்நுட்பம் தற்போது மிக்ஸிகன் பகுதியில் இருக்கும் அன் அர்பர் சாலையில் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக, 500 வாகனங்களில் வைஃபை வசதிகொண்ட இந்த பிரத்யேக கருவி பொருத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்லும்போது வைஃபை இணைப்பு மூலம் இதே கருவி பொருத்தப்பட்டிருக்கும் பிற வாகனங்களுடன் தொடர்பில் இருக்கும். பிற வாகனங்களுடன் மோதும் நிலை வரும்போது இந்த கருவி இரு வாகனங்களில் இருக்கும் டிரைவர்களையும் எச்சரிக்கும்.

சாலை சந்திப்புகளில் கடக்கும்போது இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும். ஓவர்டேக் செய்யும்போது கூட இந்த கருவி இரு வாகனங்களில் இருப்போருக்கும் தகவல் தெரிவிக்கும். ஆனால், இதன் மைனஸ் பாயிண்ட் இந்த கருவி எல்லா வாகனங்களிலும் பொருத்தினால் மட்டுமே இது பயனுள்ள வசதியாக மாறும்.

எதிர்காலத்துக்கான சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பமாக இது இருக்கும் என இதனை உருவாக்கிய மிக்ஸிகன் பல்கலைகழக எஞ்சினியர்கள் தெரிவித்தனர். அடுத்த 6 வாரங்களில் 2,800 வாகனங்களில் இந்த கருவியை பொருத்தி சோதனைகள் நடத்தப்பட உள்ளது.

குடிபோதையில் டிரைவர் வாகனத்தை செலுத்தும்போது கட்டுப்பாட்டை இழந்தால் கூட இந்த கருவி பிற வாகனங்களுடன் மோதுவதை தவிர்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் பாதுகாப்பில் இது மிகப் பெரிய தருணம் என,” அமெரிக்க போக்குவரத்து துறை செயலாளர் ரே லாஹுட் தெரிவி்த்தார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply