விந்தணுவை பாதிக்கும் சன்ஸ்கிரீன் ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Tamil Serial Today Org

விந்தணுவை பாதிக்கும் சன்ஸ்கிரீன் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Loading...

விந்தணுவை பாதிக்கும் சன்ஸ்கிரீன் ஆய்வில் அதிர்ச்சி தகவல்வெயிலில் இருந்து பாதுகாப்பினை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் சன்ஸ்கிரீனால் ஆண்களில் விந்தணு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் Copenhagen பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வு பற்றி கருத்து தெரிவித்த அவர்கள் சூரியனிலிருந்து விடுவிக்கப்படும் கழியூதாக் கதிர்களிடமிருந்து (UV Rays) பாதுகாப்பினை பெறுவதற்காக சன்ஸ்கிரீனில் பாவிக்கப்படும் இரசாயனப் பதார்த்தங்களால் விந்தணுக் கலங்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் சன்ஸ்கிரீனின் பல்வேறுபட்ட தயாரிப்புக்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவற்றில் பெருமளவானவை ஆரோக்கியமான விந்து கலங்களுள் கல்சியம் அயனை செலுத்தி பாதிப்பை ஏற்படுத்துவதை கண்டறிந்துள்ளனர்.

Loading...
Rates : 0
VTST BN