விண்டோஸ் இயங்குதளத்தில் தனது அடுத்த டேப்லட்டை வழங்குகிறது லெனோவா

Loading...

விண்டோஸ் இயங்குதளத்தில் தனது அடுத்த டேப்லட்டை வழங்குகிறது லெனோவாவிண்டோஸ்-8 இயங்குதளத்தில் இயங்கும் புதிய திங்க்பேட்-2 என்ற டேப்லட்டினை களமிறக்குவதாக அறிவித்திருந்தது நிறுவனம்.

இதை தொடர்ந்து விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் அடுத்த புதிய டேப்லட்டினையும் அறிமுகம் செய்வதாக ஓர் புதிய செய்தி வெளியாகி உள்ளது. விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இயங்கும் புதிய டேப்லட், ஐடியாபேட் யோகா என்ற பெயர் கொண்டதாக இருக்கும்.

இந்த ஐடியாபேட் யோகா டேப்லட் விண்டோஸ்-8 ஆர்டி இயங்குதளம் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் இந்த டேப்லட் கோர் ஐ7 இன்டெல் பிராசஸர் வசதி கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

மேலும் விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்டு இயங்கவிருக்கும் இந்த டேப்லட் திரை வசதியிலும் சிறப்பான வசதிகளை வழங்கும் என்று கருதப்படுகிறது.

இந்த யோகா டேப்லட்டின் அடுத்த வெர்ஷன் நிச்சயம் இரண்டு மடங்கு அதிக பேட்டரி வசதியினை வழங்குவதாக இருக்கும். சிறந்த இன்டெல் பிராசஸர் வசதியினை கொண்டதாக இருக்கும் இந்த டேப்லட்டின் விலையும் மிக எளிமையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் இந்த புதிய டேப்லட் பற்றிய அதிக எதிர்பார்ப்புகளை பற்றி விரிவாக பார்க்க இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply