விஞ்ஞானிகள் தற்செயலாக கண்டுபிடித்த மாபெரும் கண்டுபிடிப்பு

Loading...

விஞ்ஞானிகள் தற்செயலாக கண்டுபிடித்த மாபெரும் கண்டுபிடிப்புவிஞ்ஞானிகள் ஏதாவது ஒரு குறித்த நோக்கத்தை அடிப்படையாக வைத்தே ஆராய்ச்சி செய்வார்கள்.

இதன்போ து பல சமயங்களில் விபத்துக்களும் இடம் பெறுவதுண்டு. ஆனாலும் ஆராய்ச்சிகளின் போது இடம்பெறும் விபத்துக்கள் சில சமயங்களில் பயனுள்ளதாக மாறிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

அவ்வாறே இரசாயன ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தற்செயலாக அதி வினைத்திறன் வாய்ந்த மின்கல வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இம் மின்கலமானது சம காலத்தில் பாவனையிலுள்ள அதி சிறந்த மின்கலங்களை விட 400 மடங்கு வினைத்திறன் வாய்ந்ததாகும். அத்துடன் சுமார் 200,000 தடவைகள் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.

இது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கையில் “சாதாரண ஒருவர் தனது ஆயுட் காலம் முழுவதும் இந்த மின்கலத்தினை பாவிக்க முடியும் எனவும், எதிர்காலத்தில் கைப்பேசிகள், கணினிகள், கார்கள் உட்பட விண்வெளி ஓடங்களிலும் பயன்படுத்த முடியும்” என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இம் மின்கலம் எவ்வாறான தொழில்நுட்பத்தில் செயற்படுகின்றது என்பது தொடர்பான தகவலை குறித்த விஞ்ஞானிகள் குழு இதுவரை வெளியிடவில்லை.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply