வறுத்த சிக்கன் குழம்பு

Loading...

வறுத்த சிக்கன் குழம்பு
தேவையான அளவுகள் :

சிக்கன் – அரை கிலோ
வறுத்து அரைக்க…
வர மிளகாய் – 8
மல்லி – 4 டீஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – 3 இன்ச் அளவு
வெ.பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 10
தேங்காய் – ஒரு கப்


தாளிக்க…

க.பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 3


செய்முறை

சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

சுத்தம் செய்த கோழியுடன் அரை டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, வெ.பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.

இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கிவிட்டு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி க. பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

பின்னர் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து, சிக்கன் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான வறுத்த சிக்கன் குழம்பு ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply