வர்த்தகத்தை விரிவுபடுத்த கேலக்ஸி வரிசையில் புதிய டேப்லெட்

Loading...

வர்த்தகத்தை விரிவுபடுத்த கேலக்ஸி வரிசையில் புதிய டேப்லெட்சாம்சங் இந்தியா தனது வர்த்தக எல்லையை விரிவுபடுத்தும் வகையில் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு கேலக்ஸி நோட்-800 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட் ரூ.39,990க்கு விற்கப்படுகிறது.

இந்த புதிய கேலக்ஸி டேப்லெட் எக்கச்சக்க தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 10.1 இன்ஞ் எல்சிடி தொடுதிரை மிகத் துல்லியமாக இருக்கும். அதோடு இந்த டேப்லெட் 1.4 க்வாட் கோர் ப்ராசஸர், 2ஜிபி ரேம் ஆகியவற்றோடு ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் இயங்குதளத்தில் வருவதால் இதன் இயக்கம் தாறுமாறான வேகத்தில்
இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கேமராவைப் பொருத்தவரை இந்த டேப்லெட் ஆட்டோ போக்கஸ் கொண்ட 5 மெகா பிக்ஸல் பின்பக்கக் கேமராவையும், அதே நேரத்தில் 1.9எம்பி முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது. இதனால் மிகத் தெளிவான புகைப்படத்தையும் மற்றும் வீடியோக்களையும் எடுக்க முடியும்.

இந்த டேப்லெட்டின் 16 ஜிபி மெமரியை, 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். ஒரே நேரத்தில் பல வேலைகளை மிக விரைவாகச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த டேப்லெட் மல்டி ஸ்கிரீன் வசதியையும் கொண்டிருக்கிறது.

அதன் மூலம் இதன் திரையில் ஒரே நேரத்தில் ஏராளமான பக்கங்களை பார்க்க முடியும். மேலும் இந்த டேப்லெட் பலசூப்பாரன அப்ளிகேசன்களையும் கொண்டு வந்திருக்கிறது. இந்த டேப்லெட் ரூ.39,990 விலைக்கு விற்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply