வயிற்றில் கட்டி வந்துடுச்சா இதோ சூப்பர் மருந்து

Loading...

வயிற்றில் கட்டி வந்துடுச்சா இதோ சூப்பர் மருந்துபொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம்.
தினமும் ஒவ்வொரு கீரை வகை விதம், நம் அன்றாடம் உணவில் வெவ்வேறு வகையான கீரையை சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கீரை வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது அரைக்கீரை, சிறுகீரை என்பனவாகும். ஆனால் கீரை வகையில் மற்றொறு சிறந்த கீரையும் உண்டு. அது தான் வெந்தய கீரை.
வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன.

வெந்தயக் கீரையின் மகத்துவங்கள்

வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது.
வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலச்சிக்கல் நீங்கும்.
வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும்.
இதை தினமும் உணவில் சேர்ப்பதால், வறட்டு இருமல் மற்றும் குடல் புண்கள் மறைந்துவிடும்.
வெந்தயக் கீரையுடன் முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து, நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து உடலில் வீக்கம் உள்ள இடத்தின் மீது பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.
வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது.
இந்த கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
மேலும் வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி மற்றும் வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply