வடை கறி

Loading...

வடை கறி
தேவையான பொருட்கள் :

கடலைப் பருப்பு – 200 கிராம்

வெ. பூண்டு பற்கள் – 3

பீன்ஸ் – 6

இஞ்சி – 1 சிறிய துண்டு

மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்

அரைத்த தேங்காய் விழுது – 1/2 கப்

கசகசா – 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 6

சோம்பு – 1 டீஸ்பூன்

தக்காளி – 50 கிராம்

கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு

க. பட்டை, கிராம்பு – சிறிது

மல்லித்தழை – சிறிது

உப்பு – தேவைக்கு ஏற்ப


செய்முறை :

கடலைப் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து சோம்பு, உப்பு, மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் சிறிய வடைகளாகத் தட்டி பொரித்து எடுக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு க.பட்டை, கிராம்பு, கசகசா வறுத்து பொடித்து தனியே வைக்கவும்.

பிறகு அதே கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரிந்த வெ.பூண்டு, பொடியாக நறுக்கிய பீன்ஸ், தக்காளி போட்டு வதக்கி, இஞ்சியை பொடியாக அரிந்து அதில் சேர்த்து 1/2 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.

அரைத்த தேங்காய் விழுது மற்றும் அரைத்த பொடியைச் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

பின்னர் உதிர்த்த வடைகளைச் அதில் சேர்க்கவும். மல்லித்தழை தூவவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து விடவும்.

குறிப்பு: வெங்காயத்திற்கு பதிலாக பீன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply