லெனோவா களமிறக்கும் புதிய விண்டோஸ் டேப்லெட்

Loading...

லெனோவா களமிறக்கும் புதிய விண்டோஸ் டேப்லெட்இதுவரை ஹார்ட்வேர் சாதனங்களை மட்டுமே தயாரித்து வந்த நிறுவனங்கள் தற்போது டேப்லெட் துறையிலும் மெதுவாக காலடி பதித்து வருகின்றன. அந்த வகையில் லெனோவா நிறுவனம் தற்போது விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது.
இந்த புதிய டேப்லெட்டிற்கு திங்க்பேட் 2 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த டேப்லெட் இன்டல் ஆட்டம் ப்ராசஸர், ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 10 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும் பேட்டரி மற்றும் 3ஜி வசதி போன்ற தொழில் நுட்பங்களுடன் வருகிறது.
மேலும் இந்த டேப்லெட்டில் மைக்ரோ எச்டிஎம்ஐ அவுட்புட், 2எம்பி முகப்பு கேமரா, 8எம்பி பின்பக்க கேமரா மற்றும் என்எப்சி போன்ற வசதிகளையும் பார்க்கலாம்.
இந்த டேப்லெட்டில் விரல் பிரண்ட் ஸ்கேனரும் உள்ளது. இந்த டேப்லெட் வரும் அக்டோபரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு மைக்ரோசாப்ட்டின் சர்பேஸ் டேப்லெட்டும் வரும் அக்டோபரில் வர இருப்பதால் இரண்டு டேப்லெட்டுகளுக்கும் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply