லெனோவா அறிமுகத்தில் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்

Loading...

லெனோவா அறிமுகத்தில் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்பல சூப்பரான லேப்டாப்புகளைக் களம் இறக்கி இருக்கும் லெனோவா நிறுவனம் இன்னும் 2 மாதங்களில் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களைக் களமிறக்க இருக்கிறது. இந்த தகவலை லெனோவாவின் தலைமை மேலாளர் யாங் யுவாகிங் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

2 ஆண்டுகளுக்கு முன் லெனோவா தனது ஸ்மார்ட்போன்களை சீனாவில் விற்பனை செய்ய ஆரம்பித்தது. சீனாவில் ஆப்பிளையும் முந்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தனது ஸ்மார்ட்போன் விற்பனையை விரைவில் தொடங்க இருக்கிறது.

மேலும் இந்த ஆண்டுக்குள் 40 புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட லெனோவா திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆன்ட்ராய்டு மற்றும் இன்டலின் ஆட்டம் ப்ராசஸரில் இயங்கக் கூடிய ஸ்மார்ட்போனைக் களமிறக்க இன்டல் நிறுவனத்தோடு வர்த்தக உடன்படிக்கையை செய்தது லெனோவா.

அதோடு விண்டோஸ் போன் 8 ஸ்மார்ட்போன்களையும் களமிறக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தோடும் லெனோவா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply