ரோபோ தோழி அசத்தும் சீனா

Loading...

ரோபோ தோழி  அசத்தும் சீனாமனிதர்களை போலவே பேசி பழகும் பெண் ரோபோவை வடிவமைத்து சீன விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

ரோபோக்கள் கண்டுபிடிப்பில் முன்னணியில் உள்ள சீனா தற்போது மனிதர்களுடன் உரையாடும் வகையில் பெண் ரோபோவை உருவாக்கியுள்ளது.

3 ஆண்டுகள் கடும் உழைப்பிற்கு பின் இந்த ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் இந்த ரோபோவின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மனிதர்களுடன் சகஜமாக பேசி அந்த ரோபோ அசத்தியுள்ளது. ரோபோவின் முக பாவங்கள், உடல் மற்றும் வாய் அசைவுகள் மனிதர்களை போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ கிளவுட் மூலம் தனது செயல்களை தானே தீர்மானிக்கும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply