ரே ஸ்கூட்டருக்கான புக்கிங்கை ஆன்லைனில் துவங்கியுள்ளது யமஹா

Loading...

ரே ஸ்கூட்டருக்கான புக்கிங்கை ஆன்லைனில் துவங்கியுள்ளது யமஹாவிரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ரே ஸ்கூட்டருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கியுள்ளது யமஹா நிறுவனம். மேலும், சரியான எக்ஸ்ஷோரூம் விலையை கூறுபவர்களுக்கு புத்தம் புதிய யமஹா ஸ்கூட்டர் பரிசாக கொடுக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யமஹா தனது முதல் ஸ்கூட்டரை பார்வைக்கு வைத்திருந்தது. ரே என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த இந்த புதிய ஸ்கூட்டர் பார்வையாளர்களை கவர்ந்தது. குறிப்பாக, இளம் பெண்களை அதிகம் கவர்ந்தது.

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் இந்த ஸ்கூட்டர் தீவிரமாக சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டது. பண்டிகை காலம் துவங்கும் நிலையில், இந்த புத்தம் புதிய ஸ்கூட்டரை யமஹா விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த புதிய ஸ்கூட்டர் நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், ரே ஸ்கூட்டருக்கு ஆன்லைனில் புக்கிங் திறந்துள்ளது யமஹா. மேலும், தங்களது பகுதியில் ரே ஸ்கூட்டர் எந்த விலைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று சரியாக கணித்து கூறும் அதிர்ஷ்டசாலிக்கு ரே ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படும் என்றும் யமஹா தெரிவித்துள்ளது.

மேலும், முன்பதிவு செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் நிபந்தனைகளுக்குட்பட்டு நிச்சயம் பரிசு காத்திருக்கிறது என்று யமஹா தெரிவித்துள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply