ரெயின்போ மஃபின்ஸ்

Loading...

ரெயின்போ மஃபின்ஸ்
தேவையான பொருட்கள் :

மைதா – 1 ½ கப்
சோள மா (வெள்ளை) – 3 டேபிள்ஸ்பூன்
தயிர் – 1 கப்
சீனி – ¾ கப்
எண்ணெய் – ½ கப்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – ½ டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்
மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் – தலா ¼ டீஸ்பூன்.


செய்முறை :

ஒரு கிண்ணத்தில் மைதாவை எடுத்துக்கொள்ளவும். அதிலிருந்து 3 டேபிள்ஸ்பூன் மாவை எடுத்துவிடவும்.

அதில், 3 டேபிள்ஸ்பூன் சோள மாவை சேர்த்து, நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும். ஒரு வாயகன்ற கிண்ணத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலக்கவும்.

அதில், வெனிலா எசென்ஸ், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும். இந்தக் கலவை சற்று நுரைத்துக் காணப்படும். அதன் பின்னர் எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கவும்.

இதில், நாம் முன்பு கலந்து வைத்த மைதா மா + சோள மாக் கலவையை ¼ கப் அளவில் சிறிது சிறிதாக சேர்த்து கலக்க வேண்டும்.

மா முழுவதையும் இந்த முறைப்படியே கலக்க வேண்டும்.

கரைத்த மாவை, நான்காகப் பிரித்து, அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வண்ணத்தைச் சேர்த்து கலக்கவும்.

ஒரு மஃபின் பானில், மஃபின் லைனர் எனப்படும் தாளை வைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு ஒவ்வொன்றாக, 4 நிற மாவையும் ஊற்ற வேண்டும்.

அவனை 1800C அளவுக்கு ப்ரி ஹீட் செய்து, அதில் மஃபினை 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

ஒரு கத்தியை உள்ளே விட்டதும், மா ஒட்டாமல் சுத்தமான கத்தியாக வெளியே வந்தால், மஃபின் தயாராகிவிட்டதாக அர்த்தம்.

10 நிமிடங்கள் பானில் விட்டு, பின்னர் மஃபினை வயர் ராக்கில் ஆற வைக்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply